புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

 போர்குற்ற விசாரணை நடத்தியே தீரவேண்டும்; நவிப்பிள்ளையிடம் வலியுறுத்தியது தமிழ்க் கூட்டமைப்பு 
 "இறுதிப்போரின் போது தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் இழைத்த போர்க்குற்றங்கள் மற்றும் படைத்தரப்பினர் நடத்திய நடத்திக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டே ஆக வேண்டும்.''
 
இவ்வாறு ஐ.நா. மனித உரி மைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வலியுறுத்தியுள்ளது.
  
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று ஒரு மணிநேரம் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. 
 
இதன் போதே கூட்டமைப்பு இவ்வாறு வேண்டுகோளை விடுத்துள்ளது.  காலை 8.15 மணிக்கு ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இச்சந்திப்பில், "இலங்கை அரசின் அசமந்தப்போக்கு குறித்தும்,  தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் நவநீதம் பிள்ளையிடம் நாம் எடுத்து ரைத்தோம்'' என்று கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப் பினர்களான எம்.ஏ.சுமந்தி ரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்த னர்.
 
இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்தவை வரு மாறு:
 
"ஐக்கிய நாடுகள் சபையின் செய லாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ ஆகியோர் இணைந்து கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி கொழும்பில் வைத்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.  அந்தக்கூட்டறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்க்ஷ­ மூன்று வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும், அதிகாரப்பகிர்வு மூலம் தமிழ ருக்கு அரசியல் தீர்வு வழங் கப்படும், இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாத காலத்திற்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்பனவே அந்த வாக்குறு திகளாகும்.
 
ஆனால், இவற்றில் எதனையும் ஜனாதிபதி நிறைவேற்ற வில்லை. இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் எடுத்துரைத்தோம். இறுதி போரின் போது இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் இதுவரை சுயாதீன விசாரணை நடத்தப்படவில்லை. திருகோணமலை மாணவர்களின் படுகொலை, மூதூர் தொண்டர் நிறுவனப் படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்படவில்லை.
  
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசு முறையாகச் செயற்படுத்தவில்லை. அரசால் உள் நாட்டில் அமைக்கப்பட்ட ஆணைக் குழுக்கள் சரியாகச் செயற்படவில்லை. 
காணாமல்போன தமிழர்கள் தொடர்பிலும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு இதுவரை எடுக்கவில்லை. 
 
எனவே, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன மான சர்வதேச விசாரணை நடத்தப் படவேண்டும். அப்போதுதான் உண் மையைக் கண்டறியலாம் என்று நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தினோம். 
 
உள்நாட்டு விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை.  இந்த விசாரணைகள் நீதி, நியாயமற்று நடத்தப்படும் என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினோம். 
 
இவை தவிர, யுத்தத்துக்குப் பின்னர் அரசால் வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்பட்டபோதிலும் அவை எமது மக்களைச் சென்றடையவில்லை. இராணுவ தேவைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவுமே இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
அதேவேளை, யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு இராணு வமயமாக்கப்பட் டுள்ளதுடன். அங்கு இராணுவத்தின் ஆட்சிதான் நடக்கின்றது.  இதனால் இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். காணி அபகரிப்பு, பொதுமக்களின் விவசாயக் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்தல், தமிழ்ப் பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் துஷ்பிர யோகங்கள், கலாசார சீரழிவுகள் என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். 
 
எனவே, வடக்கு, கிழக்கில் மக்கள் குடியிருப்புகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் நவநீதம் பிள்ளையிடம் எடுத்துரைத்தோம். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசால் இதுவரையில் நியாயமானதொரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகளையும் அரசு கண்டுகொள்ள வில்லை. 
 
சரியானதொரு பதிலையும் இதுவரையில் அரசு வழங்கவில்லை. இதனால்தான் அரசு நியமித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்காமல் உள்ளோம் என்றும் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்தோம்.
 
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றது. இவை இடம்பெறாமல் பாதுகாத்துக்கொள்ள ஐ.நா. மனித உரிமை அலுவலகம் ஒன்று இலங்கையில் நிரந்தரமாகத் திறக்கப்பட வேண்டும் எனவும் நாம் நவநீதம்பிள்ளையிடம் வலியுறுத்தியுள்ளோம்.
 
அதேவேளை, அரசு d தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையில் நடைபெற்றுவந்த அரசியல் தீர்வு சம்பந்தமான பேச்சை அரசுதான் குழப்பியது என்றும் நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக்கூறினோம். அவரிடம் தெரிவித்த கருத்துகளை அறிக்கை வடிவிலும் சமர்ப்பித்துள்ளோம்.
 
நாம் தெரிவித்த கருத்துக்களுக்கு நவநீதம்பிள்ளை பதிலளிக்கையில், "எனது இலங்கை சுற்றுப்பயணத் தின்போது பல்வேறு தரப்பினர்களிட மிருந்து திரட்டிய தரவுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நாவில் இடம் பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடரில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கவுள்ளேன். அத்துடன் இது தொடர்பில் அங்கு வாய்மூலமாக குரல் கொடுக்கவும் உள்ளேன்.  அடுத்த வருடம்  மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின்போது இலங்கை நிலைமை தொடர்பில் பூரண அறிக்கையயான்றையும் சமர்ப்பிக்கவுள்ளேன். அத்துடன் எனது இலங்கை பயணம் தொடர்பில் ஐ.நா. அரசியல் குழுவிடம் தெளிவாக எடுத்துரைப்பேன்'' என்று கூறினார்'' - என்றனர். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=100602268631819366#sthash.XTSHFith.dpuf

ad

ad