புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

ஐநா அலுவலகத்தின் உள்ளே அரச “CID” திணறிய ஊடகவியலாளர்கள்!! பதறிய நவிப்பிள்ளை??

ஐநா அலுவலகத்தின் உள்ளேயும் புலனாய்வாளர்கள் – ஊடக அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை குழப்பினர் கொழும்பில் உள்ள ஐக்கியநாடுகள் சபை அலுவலகத்தில் பணியாற்றும் அரசாங்க அதிகாரிகள் கடுமையாக செயற்படுவதாக இன்றைய சந்திப்பு ஒன்றில்
கலந்து கொள்ளச் சென்ற  எம் சகோதர ஊகவியலாளர்கள் (சிங்கள ஊடகவியலாளர்)கூறினார். ஏழு ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை இன்று பிற்பகல் 4 மணிக்கு சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அமைப்புகளில் இருந்தும் ஏழு பிரதிநிதிகள் அலுவலகத்துக்கு சென்றபோது ஐந்து பேருக்கு மாத்திரமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு நின்ற அரசாங்க (சிங்கள) பெண் அதிகாரியுடன் தர்க்கப்பட்டனர். ஆனாலும் அவர் இணங்கவில்லை. இதனால் ஏனைய மூன்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் வெளியே நின்றனர். சந்திப்புக்கு சென்றதும் நவநீதம் பிள்ளையின் அதிகாரிகளிடம் முறையிட்டனர். உடனடியாக செயற்பட்ட நவநீதம் பிள்ளையின் அதிகாரிகள் ஏனைய மூன்று பிரதிநிதிகளையும் உள்ளே அழைக்குமாறு உத்தரவிட்டனர்;. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அந்த அரசாங்க (சிங்கள)  பெண் அதிகாரி மறுத்துவிட்டார் என தெரிவித்தார்.
அதேவேளை ஏற்கனவே மூன்று சிங்கள ஊடகவியலாளர்கள் சந்திப்பு நடைபெறும் அறையில் அமர்ந்திருந்தனர். ஊடக அமைப்புகளின் ஐந்து பிரதிநிதிகளுடன் அவர்களும் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர். ஆனால் அந்த மூன்று ஊடகவியலாளர்களும் எந்த அமைப்பிலும் அங்கம் வகிப்பது இல்லை. அவர்கள் எந்த ஊடக அமைப்பின் பிரதிநிதிகளாக உள்ளே சென்றனர் என அரசாங்க (சிங்கள) பெண் அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில்கூறாது சென்று விட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளர் தெரிவித்தார். சந்திப்பில் கலந்துகொள்ளவிடாது தடுக்கப்பட்ட மூன்று ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் மிகவும் கடுமையாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் என்றும் இதனாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார். சந்திப்பு முடிவடையும் வரை அந்த அதிகாரி அருகிலேயே இருந்ததாகவும் எதனையும் வெளிப்படையாக பேச முடியாத நிலை காணப்பட்டது என்றும் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தினர்.

ad

ad