22 வயதான யுவதியை கடத்தி நிர்வாணப் படம் எடுத்த நபருக்கு விளக்கமறியல்!
உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக மஹர பெண்கள் பாடசாலையில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த 22 வயதான யுவதியை கடத்திச் சென்று ஆடைகளை அவிழ்த்து புகைப்படம் எடுத்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீதியில் நடந்தது சென்ற யுவதியை பலவந்தமாக முச்சக்கர வ
ண்டியில் ஏற்றி அவரை கடத்திச் சென்றுள்ள சந்தேக நபர், யுவதியை மானபங்கப்படுத்தி கையடக்க தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்துள்ளதுடன் சித்திரவதை செய்துள்ளார்.
ண்டியில் ஏற்றி அவரை கடத்திச் சென்றுள்ள சந்தேக நபர், யுவதியை மானபங்கப்படுத்தி கையடக்க தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்துள்ளதுடன் சித்திரவதை செய்துள்ளார்.
கொழும்பு மொறட்டுவ பகுதியை சேர்ந்த சந்தேக நபரே இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், யுவதியை படம்பிடித்ததாக கூறப்படும் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கும், யுவதிக்கும் சமூக வலையத்தளமான பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பே யுவதி கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்திற்கான காரணம் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திருமணமான இந்த சந்தேக நபர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.