பா.ஜனதா 278 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், கூட்டணி கட்சிகள் மற்றும் இதர மாநில கட்சிகளின் தயவின்றியே அக்கட்சி மத்தியில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.