புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2024

கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு!

www.pungudutivuswiss.com

தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது

கெஹெலிய உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சிலர் பல குற்றங்களை புரிந்துள்ளதாகவும் இவை தொடர்பில் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் முறை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மருந்துகளை நோயாளர்களுக்கு வழங்கியதன் மூலம் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகிய நிலையில் நிரந்தர அங்கவீனர்களாக சுமார் 100 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குற்றங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தரமற்ற மருந்துகளை விநியோகித்த விநியோகஸ்தர் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் எட்டு அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தரமற்ற மருந்துகளை பெற்றுக்கொண்டதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் நிரந்தர நோய்களுக்கு ஆளாகியுள்ள நபர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்காக சுகாதார அமைச்சின் பூரண ஒத்துழைப்பைப் பெறவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டு வருகிறது.

ad

ad