புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

 பெண்ணை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த கைதிக்கு அந்த பெண்ணையே நீதிபதி திருமணம் செய்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி அருகே கருத்த லாங்குறிச்சியை சேர்ந்த கோவிந்த ராஜ் என்பவர் மகன் சக்திவேல்(25). கட்டிட தொழி
லாளியான இவர் அதே ஊரைச் சேர்ந்த கலியன் என்பவர் மகள் கலைச்செல்வியுடன்(20) நெருக் கமாக பழகியுள்ளார். இதையறிந்த கோவிந்த ராஜ் தனது மகனுக்கு திருமணம் செய்ய வேறு இடத்தில் பெண் பார்க்க ஆரம்பித்தார். இதை எதிர்த்து கலைச்செல்வி சக்திவேல் வீட்டுக்கு சென்று முறையிட்டுள்ளார். அப்போது சக்திவேல், அவரது அம்மா தங்கம்மாள், தம்பி சரத்குமார், உறவினர் அருணாசலம் ஆகியோர் கலைச்செல்வியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் அளித்தார். அதில் சக்தி வேல் தன்னை பலாத்காரம் செய்த தாகவும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக தெரிவித்திருந் தார். புகாரின் பேரில் சக்திவேல் கைது செய்யப்பட்டார்.
மேலும் தங்கம்மாள், சரத்குமார், அருணாசலம் ஆகிய மூவரும் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத் தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தி மாற்றுமுறை தீர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு சக்திவேல் குடும்பத்தினரையும், கலைச்செல்வி குடும்பத்தின ரையும் அழைத்து இருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
அதன்படி புதன்கிழமை காலை விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள தேரடி வினாயகர் கோயி லில் சக்திவேல், கலைசெல்வி திருமணத்தை நீதிபதி கிருஷ்ணமூர்த்தி நடத்திவைத்தார்.

ad

ad