புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2024

விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு அப்பால் கேள்விகள்! - மதுர விதானகே குற்றச்சாட்டு

www.pungudutivuswiss.com

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக  அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்

விஞ்ஞானப் பாடம் தொடர்பான வினாத்தாளில் மூன்று பல்தேர்வு வினாக்கள் மற்றும் மூன்று கட்டுரை வினாக்கள் தொடர்பாக ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினவியதாகவும் மதுர விதானகே தெரிவித்தார்.

இதன்போது, பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் புள்ளிகள் வழங்கல் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வின் போது, ​​இது தொடர்பில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேலும் கூறினார்.

ad

ad