-

16 மே, 2014

260 பாஜக முன்னிலை 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி பாஜக 271 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது.

ad

ad