புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012


புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 500 பேரை வரும் புதன்கிழமை இலங்கைக்கு அனுப்புகிறது பிரித்தானியா!
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் 500 புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக மற்றொரு செய்தி தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் "த இன்டி பென்ரன்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்களை பிரித்தானிய குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தடவையாக பெருந்தொகையினர் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதிமன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
கடந்த வருடத்தில் இவ்வாறு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்டுத்தும் சாத்தியம் உள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இங்கிலாந்திலிருந்து 3 விமானங்களில் இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்!
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்ற இலங்கை தமிழர்களில் பெருந்தொகையானோர் வருகின்ற புதன்கிழமை திருப்பியனுப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் இந்த புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
தங்களை இலங்கைக்கு திருப்பியனுப்பினால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகுவோம் என அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களில் பலர் கோரியபோதிலும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பியனுப்பப்படவுள்ளனர்.
சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கருத்துக்கூற மறுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad