புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012


நகைச்சு‌வை நடிகர் லூஸ்மோகன் காலமானர்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் உடல்நலக்குறைவால் இன்று (16.09.2012) காலமானார். தமிழ் சினிமாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் லூஸ்மோகன். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால்சிகிச்சை பெற்று வந்தர். தனது ஒரே மகன் கார்த்திக் வீடு உள்ள ‌மைலாப்பூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார். இவரது மனைவி பச்சையம்மாள் கடந்த 2004-ம் ஆண்டு இறந்தார். காலமான லூஸ் மோகன் இறுதிச்சடங்கு சென்னை மைலாப்பூரில் நடக்கிறது. லூஸ் மோகன் மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

லூஸ்மோகன் சினிமா உலகில் லட்சக்கணக்கான ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் வாழ்க்கை நகைச்சுவையில் கலந்திருக்கவில்லை. மன உளைச்சல் காரணமாக மிகவும் வேதனைப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு லூஸ் மோகன் சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், தன்னுடைய மருமகள் காலை உணவைக் கூட கொடுக்காமல் வேதனைப்படுத்துகிறார். மூத்த குடிமகனான எனக்கு நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் சொல்-யிருந்தார். 

புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து அவர் மகன் மற்றும் மருமகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் இது சாதாரண குடும்ப பிரச்சனைதான். அவர் உடல்நலம் கருத்தில் கொண்டு ஒரு சில உணவு வகைகளை அவருக்கு கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் சொன்னதன் பேரில் நாங்கள் கொடுக்காமல் நிறுத்தி வைத்தோம். மற்றபடி அவருக்கு உணவு கொடுக்காமல் ஒருபோதும் பட்டினி போட்டதில்லை என்று மகனும், மருமகளும் தெரிவித்தனர்.
இதன்பின்னர் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது. நமது நக்கீரன் இதழுக்கு இதுதொடர்பாக லூஸ்மோகன் ஒரு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். கமிஷனர் அலுவலகத்தில் லூஸ்மோகன் புகார் கொடுத்துவிட்டு வெளியே வரும்போது, அவரை கைத்தாங்கலாக கமிஷனர் அலுவலகத்தின் பிஆர்ஓ பணியில் உள்ள போலீசார் அவரை பாதுகாப்பாக பிரதான சாலைவரை கொண்டு சென்று ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டனர். ஆட்டோவுக்கு 100 ரூபாயை போலீசாரே கொடுத்து அனுப்பி வைத்தனர். அப்போது நகைச்சுவை வழிந்தோடும் அந்த கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. உதவி செய்தவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு லூஸ் மோகன் பயணப்பட்டார். இன்று அவர் ரசிகர்களைவிட்டு உலக வாழ்க்கையிலிருந்தே மொத்தமாக பயணப்பட்டிருக்கிறார்.

ad

ad