புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012


அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' நிகழ்வு!
அமெரிக்காவில் நியூயோர்க், நியூ ஜெர்சி, பென்சில்வானியா மாநிலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ஆதரவுடன் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்கில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்விற்கு அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை உறுப்பினருமாகிய ராம்கே கிளார்க் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்விற்கு கனடாவில் இருந்து சென்ற இசைக் குழுவினர்களினால் சிறந்த இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கியிருந்தனர். அதில் அமெரிக்காவில் இருக்கும் இளம் தமிழ் பாடகர்களும் கனடாவில் இருந்து வருகை தந்த இளம் பாடகர்களும் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.
இந் நிகழ்விற்கான செலவினங்களை நியூயோர்க் நகர தமிழ் வர்த்தகர்கள் பொறுப்பேற்றது மாத்திரமன்றி, இந் நிகழ்வின் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல் திட்டங்களுக்காக 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நா.த.அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தமிழீழ அரசாங்கத்திற்கு உறுதுணையாக பங்களித்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

ad

ad