புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012


முதலமைச்சர் தெரிவுகளிலிருந்து ஜனாதிபதி விலகினார்! கிழக்கின் ஆட்சி குறித்து நாளை சம்பந்தனுடன் மகிந்த பேச்சு!
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் தெரிவுகளிலிருந்து ஜனாதிபதி விலகிக் கொண்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபை மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கான முதலமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களை தெரியும் பொறுப்பினை ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்படி, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களான நிமால் சிறிபால டி சில்வா, மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழப்பெரும, பசில் ராஜபக்ச, அனுரபிரியதர்சன யாபா, சுசில் பிரேமஜயந்த ஆகியோரிடம் முதலமைச்சர், அமைச்சர் தெரிவுகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் இடம்பெற்ற காலத்தில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு பதவிகளை வழங்க வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
விருப்பு வாக்கு, அனுபவம், இன விகிதாசாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கிழக்கு மாகாண ஆட்சி அமைத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெறவிருந்ததாகவும், சம்பந்தன் சுகவீனமடைந்த காரணத்தினால் இந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, முதலமைச்சர் தெரிவு தொடர்பான பிரச்சினைக்கு ஜனாதிபதி தலைமையில் தீர்வு காணப்படுமென திவயின பத்திரிகையில் முக்கிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணசபைக்கான முதலமைச்சர் தொடர்பிலான சர்ச்சைக்கு ஜனாதிபதியின் தலைமையிலான கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் தீர்வு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad