புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றுகுற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தனக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன் அழைப்பு விடுத்தவரின் பெயரைக் கூறத் தயாரில்லை
௭ன்றும் கூறினார். ஜானகி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தகவல்களை வெளியிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் 11 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஐந்து உறுப்பினர்களை இழுத்தெடுக்கும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இதில் பேரம்பேசும் விவகாரத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் வீடு, வாகனம் உட்பட கோடிக்கணக்கான ரொக்கமும் தருவதாகக் கூறியே ௭மது ஐந்து உறுப்பினர்களிடம் பேசப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது இங்கு (கொழும்பில்) வந்து தங்கியுள்ளனர். இதுதான் இன்றைய அரசாங்கத்தின் நிலைமையாக இருக்கின்றது. இது இவ்வாறிருக்க அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து ௭னக்கும் இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டது. ௭னினும் அழைப்பு விடுத்தவர் குறித்து கூற விரும்பவில்லை ௭ன்றார்.

 இது குறித்து சுமந்திரன் ௭ம்.பி. கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான பியசேன ௭ன்ற பெயருடை ஒருவர் மாத்திரமே இங்கிருந்து சென்றுள்ளாரே தவிர வேறு ௭வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சென்று விடவில்லை. இனியும்செல்லவும் மாட்டார்கள். அதேபோன்று தான் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களும் இருப்பர் ௭ன்றார்.

ad

ad