புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012


விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே
மாட்டிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம்  : வைரமுத்து

 கவிஞர் வைரமுத்து தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,  ’’காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிற்கு கீழ்தான் மத்தியஅரசு உள்ளது.
தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றாலும் அந்த தண்ணீர் தர மறுப்பது மனிதர்கள்தான். இது கண்டிக்கத்தக்கது. காவிரி தண்ணீரை கர்நாடகம் வழங்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வெற்றி தமிழர் பேரவையும் பங்கேற்றது.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் குறிப்பிட்ட சதவீதம் பாதிக்கும் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. உலகமயமாக்கலின் விளைவுதான் இது. அன்னிய முதலீட்டை சுத்தமாக அனுமதிக்க முடியாது என்று கூற இயலாது. எந்தந்த நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கிறோம் என்பதில் தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது’’என்று கூறினார்.

மேலும் அவர்,  ‘’நடிகர் கமலின் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். சில் ஒளிபரப்புவது குறித்து பிரச்சினை என்று கேட்கிறீர்கள். விஞ்ஞானத்திற்கும், வியாபாரத்திற்கும் இடையே விஸ்வரூபம் மாட்டிக் கொண்டு இருக்கிறது’’என்று கூறினார்.

ad

ad