புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாக்பூரில் இன்று தொடங்கியது. 
இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அணியில் இருந்து நீக்கப்பட்ட யுவராஜ்சிங், ஜாகீர்கான் ஆகியோருக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, பியூஸ் சாவ்லா இடம் பெற்றனர். ஜடேஜா டெஸ்டில் அறிமுகமாகி உள்ளார். இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடன் (அஸ்வின், ஒஜா, சாவ்லா) களம் இறங்கியது. 

இதேபோல ஜடேஜாவும் சுழற்பந்து வீரர் ஆவார். வேகப்பந்தில் இஷாந்த் சர்மா மட்டுமே இடம் பெற்றார். ஒரே ஒரு வேகப்பந்து வீரருடன் ஆடும் டோனியின் முடிவு ஆச்சரியமானது. இதேபோல இங்கிலாந்து அணியிலும் 2 மாற்றம் இருந்தது. காயம் அடைந்த ஸ்டீவன்பின், சமீத்பட்டேல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பிரெஸ்னென், புதுமுக வீரர் ஜோரூட் சேர்க்கப்பட்டனர். 

இரு அணி வீரர்கள் வருமாறு:- 

இந்தியா: டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், புஜாரா, தெண்டுல்கர், வீராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், ஒஜா, பியூஸ்சாவ்லா, இஷாந்த் சர்மா. 

இங்கிலாந்து: கூக் (கேப்டன்), காம்டன், டிராட், பீட்டர்சன், இயன்பெல், ஜோரூட், பிரையர், பிரெஸ்னென், சுவான், ஆண்டர்சன், பனேசர், இங்கிலாந்து அணி கேப்டன் கூக் `டாஸ்' வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அவரும், காம்டனும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 

ஆட்டத்தின் 5-வது ஓவரில் தொடக்க ஜோடியை பிரித்து இஷாந்த் சர்மா நம்பிக்கை அளித்தார். காம்டன் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து டிராட் களம் இறங்கினார். சிறிது நேரத்தில் இங்கிலாந்து கேப்டனும், மற்றொரு தொடக்க வீரருமான கூக் 1 ரன்னில் இஷாந்த்சர்மா பந்தில் `அவுட்' ஆனார். 16 ரன்னில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்தது. 

அடுத்து வந்த வீரரான பீட்டர்சனும் களம் இறங்கி நிதானமாக விளையாடி வருந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்திருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி தொடர்ந்து ஆடிது. பீட்டரசன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். எதிர் முனையில் விளையாடிய டிராட் 44 ரன் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த பெல், பீட்டரசனுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

ad

ad