புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012


மலிங்காவின் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி அபார வெற்றி

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாகப் போட்டிகளில் பங்கேற்றுவரும் அவர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே இந்தப் பந்துவீச்சுப் பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பாஷ் லீக் போட்டிகளில் இலங்கையின் வேகப்பந்து
வீச்சாளர் லசித் மலிங்கா அதிரடியான பந்துவீச்சுப் பெறுபேற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி லசித் மலிங்காவின் அதிரடியான பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாது 15.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த பெர்த் அணி இறுதி 6 விக்கெட்டுக்களையும் 19 ஓட்டங்களுக்கு இழந்தது.
துடுப்பாட்டத்தில் ஹில்ட்டன் கார்ட்விரைட் 17 ஓட்டங்களும், அடம் வோகஸ் 14 ஓட்டங்களும் பெற்றனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் டி20 வரலாற்றில் இரண்டாவது மிகச்சிறப்பான பந்துவீச்சுப் பெறுபேற்றை வெளிப்படுத்திய லசித் மலிங்கா 4 ஓவர்களில் ஓர் ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இது இங்கிலாந்தின் சாமர்செட் அணிக்காக அருள் சுப்பையா 3.4 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்குக் கைப்பற்றிய 6 ஓட்டங்களுக்கு அடுத்ததாகப் பெறப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுபேறாகும்.
70 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 29 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் போது மழை குறுக்கிட்டது.
அதன் பின்னர் போட்டி 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக ஆரம்பிக்கும்போது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 ஓவர்களின் நிறைவில் பெற்றிருக்க வேண்டிய 6 ஓட்டங்களை அவ்வணி ஏற்கனவே பெற்றிருந்தால் ஒரு பந்து மட்டும் வீசியதுடன் போட்டி நிறைவுக்கு வந்தது.
துடுப்பாட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாக லூக் ரைட் 11 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்றார். போட்டியின் நாயகனாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் லசித் மலிங்கா தெரிவானார்.

ad

ad