புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2013


தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம்! அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்!- இரா.சம்பந்தன்
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார்.
 அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தாவது:-
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
தமிழரைப் பலவீனப்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை அடையாளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் தான இலங்கை அரசாங்கம் காலத்தை கழித்து வருகின்றது.
மனித உரிமை மீறல் தொடருகின்றது. அனைத்துலக சமூகம் எமது நிலை தொடர்பாக தமது முயற்சிகளை கைவிட முடியாது. தொடர்ந்து செயற்பட்டு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்.
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது.
நாட்டின் இறைமையில் தமிழ் மக்களும் பங்காளிகளாக வேண்டும். தற்போதைய அரசமைப்பு முறைமையின் கீழ் அது சாத்தியமற்றதாகும்.
சாதகமான நிலை விரைவில் ஏற்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
அடுத்த வாரம் அமெரிக்க அரச உயர்மட்டக்குழு ஒன்று கொழும்பு வரவிருக்கின்றது.
தற்போதைய இலங்கை நிலைவரத்தை அறிந்து 2013 மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இக்குழு சமர்ப்பிக்கும் என்று நம்புகின்றோம்.
அமெரிக்காவும் வேறு நாடுகளும் அறிக்கைகளை சமர்ப்பிக்கவிருப்பதாக அறிகின்றோம்.
அமெரிக்கா, இந்தியா மற்றும் அனைத்துலக சமூகமும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே அரசியல் தீர்வு காணும்படி இலங்கை அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றது.
இது விடயத்தில் அனைத்துலக அரசுகள் தெளிவாக இருக்கினறன. இதனை உள்வாங்கும் நிலையில் கொழும்பு அரசாங்கம் இல்லை.
சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பிறப்புரிமையை எவரும் பறிக்க விடமுடியாது.
அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும். அதிகாரம் நம் கைகளில் இல்லாதபடியால் நாம் இப்போதும் சமமான மக்களாக வாழமுடியாத நிலையில் உள்ளோம்.

நாம் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்வரும் மாதங்களில் தற்போதைய நிலவரங்களில் மாற்றம் ஏற்படலாம் என்றார் இரா. சம்பந்தன். 

ad

ad