புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2013




               ஸ்தூரி, யுவராணி, வையாபுரி என சின்னத்திரை, வெள் ளித்திரை நட்சத்திரங்களை இறக்கிக் கொண்டு வந்து, 2 வருடம் முன்பு, போடியில் தனது "ஜி.பி. தங்க நகைக்கடன்' என்ற வட்டிக்கடையைத் திறந்தார் போடி கணேஷ் பாண்டியன்.

மின்னல் வேக வளர்ச்சி இரண்டே ஆண்டு களில், கோம்பை, தேவாரம், பாளையம், சின்ன மனூர், சில்லமரத்துப்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, நரசிங்கபுரம் உட்பட, தேனி, பெரியகுளம், மதுரை மாவட்டங்களில் 39 கிளைகளைத் திறந்தார் கணேஷ் பாண்டியன்.

அத்தனை கிளைகளையும் திறப்பதற்கு வெள்ளித்திரை, சின்னத்திரை நட்சத்திரங்களை அழைத்துக் கொண்டு வந்து தனது "தங்கக் கடன் ரசனை'யை பறைசாற்றினார் கணேஷ் பாண்டியன். ஒவ்வொரு கிளையிலும் சுமார் ஐநூறு, அறுநூறு வாடிக்கையாளர்கள். இந்த 39 கடைகளிலும் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய்.

அந்த 39 கடை களையும் ஒரே நாளில் இழுத்து மூடி விட்டு பறந்து விட் டார்கள் அவற்றின் ஊழியர்கள்.

""என் சம்சாரத் தின் 4 பவுன் செயினை 40 ஆயிரத்துக்கு ஜி.பி. யில அடகு வெச்சேன். வட்டியும் முதலு மாக 42 ஆயிரத் தைக் கொண்டு போய்க் கட்டிவிட் டேன். "சாயந்திரம் வாங்கிப் போ' என் றார்கள். சாயந்தரம் போனேன். "லாக் கர்ல இருக்கு... எடுக்க நேரமில்லை, நாளைக்கு வா' என்றார்கள். மறுநாள் போனேன். லாக்கர் சாவி தொலைந்து விட்டது நாளை வா என்றார்கள். 4 நாளில் என்னைப் போல 15 பேர், பணங்கட்டியும் நகையை மீட்க முடியாமல் போனது. அத்தனை பேரும் சேர்ந்து சத்தம் போட்டோம். மறுநாளில் இருந்து கடையைத் திறக்கவே இல்லை. இந்தக் கிளையில் 500-க்கும் அதிகமானவர்கள் நகைகளை அடகு வைத்திருக்கிறோம்!'' -பரிதாபமாகச் சொன்னார் சில்லமரத்துப் பட்டி மணிவேல்.

சில்லமரத்துப்பட்டிக் கடை மூடப் பட்ட அதே நாளில்தான் 39 கடைகளுக்கும் மூடுவிழா நடத்தப்பட்டிருக்கிறது.

தனக்கென்றிருந்த அரை பவுன் தோட்டை மீட்க வந்து, மூடப்பட்ட கடையைப் பார்த்து பொருமிக் கொண்டிருந்த பூம்பாறை வீரசின்னம்மாளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

""நாசமாப் போக... இந்தக் கடைகாரனுங்க மூடிட்டு ஓடிப் போய்ட்டானுங்களாமே... என் வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா என்னை அடிச்சே கொன்னுபோடுவாரே!'' -தலையில் அடித்துக் கொண்டார் வீர சின்னம்மாள்.

போடியைச் சேர்ந்த பூக்கடை சக்திவேலு 2 பவுன் நகையை ஜி.பி.யில் அடகுவைத்துப் பறி கொடுத்திருக்கிறார்.

""பேங்க்ல அடகு வச்சா பாதுகாப்பா இருக்கும்தான். ஆனால் அக்கவுண்ட் உள்ளவங்கதான் அடகு வைக்க முடியும். உரசிப் பாக்கிற ஆசாரிக்கு கூலி தனியா கொடுக்கணும். நம்ம நோக்கத்துக்கு வச்சு நெனைச்ச நேரம் திருப்ப முடியுமா? இங்கே அப்படியில்லை. ஏலத்திலும் விடமாட்டார்கள் என்றுதான் இங்கே வந்தோம். கடைசியில் முதலுக்கே மோசமாகிவிட்டது. நடிகைகளையெல்லாம் கூட்டி வந்து கடையைத் திறந்தார். நம்ப வச்சு கழுத்தறுத்துப் போட்டாரே!'' -சாபம் கொடுத்தார் பூக்கடை சக்திவேல்.

""தங்கநகை வட்டிக்கடைகளில் எப்படி நஷ்டம் ஏற்படும்? போடி கணேஷ் பாண்டியனுக்கு என்னாயிற்று?'' அவருடைய நட்பு வட்டாரத்தில் விசாரித்தோம்.

""அந்தக் குடும்பமே கில்லாடிக் குடும்பம்தான். கணேஷ் பாண்டியனின் அப்பா, பலபேரிடம் எக்க சக்கம் கடன் வாங்கிவிட்டு, சொத்துக்களை பினாமி பேருக்கு மாற்றிவிட்டு, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தவர். அப்பாவுக்குத் தப்பாத மகனாகப் பிறந்திருக்கிறார் கணேஷ் பாண்டியன். தானதருமம், போலீசுக்கு உதவி என்று தாராளமாகச் செய்து எல்லாரையும் வளைத்துப் போட்டுக் கொண்டு இந்த மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளார். 2 வருடம் முன்பு கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நொடித்தார். பிறகு, மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கித் தருகிறேன் என்று மகளிர் குழுக்களிடம் 40 லட்சம் வரை சுருட்டினார். அந்தப் புகார் அப்படி யே நிற்கிறது. இப்போது 39 கடைகளிலும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை வெளிமார்க்கெட்டில் 200 கோடிக்கு மறு அடகு வைத்திருக்கிறார். அதற்கு வட்டி கட்டவில்லை. இந்த நிலையில்தான் அத்தனை கடைகளையும் மூடிவிட்டு எஸ்.பி.யிடம் சரணடைந்து விட்டார்!'' என்கிறது அவரது நட்பு வட்டாரம்.

போன மாதம், தனது 15 வட்டிக் கடைகளையும் இழுத்து மூடிவிட்டு, ஓட்டமெடுத்தார் கம்பம் கணபதி நகைக்கடன் அதிபர். அவரும், 1000 ரூபாய்க்கு அடகு பிடித்த நகையை 1200 ரூபாய்க்கு மறு அடகு வைத்தவர்தான். கணபதி அடகுக்கடை முதலாளி அரசகுமார். அவரை உடனே கைது செய்த எஸ்.பி.பிரவீன்குமார், மறு அடகு நகைகளை நகையின் உரிமையாளர்களே மீட்டுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால், ஜி.பி.ஓனர் கணேஷ்பாண்டியன் விஷயத்தில்...

""இதில எக்கச்சக்கம் பணம் போயிருக் கிறது. கோர்ட் மூலம்தான், பாதிக்கப் பட்டவர்கள் தீர்வு காண வேண்டும். இனிமேல் இந்த மாவட்டத்தில், புதிதாக யாருக்கும் வட்டிக்கடை லைசென்ஸ் கொடுக்க வேண்டாம் என்று அதி காரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்!'' என்கிறார் எஸ்.பி.

ஜி.பி.தங்கநகைக் கடன், கணபதி நகைக்கடன் கடைகளில் வேலைபார்த்து அனுபவம் பெற்ற (?) சிலர், இரண்டெ ழுத்து, மூன்றெழுத்துப் பெயர்களில் "நகைக்கடன்' வட்டிக்கடைகளைத் திறந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆடம்பரமாக நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களில் சிலர், வெகு சீக்கிரம் மூடி ஓடும் கண்டிஷனில் இருப்ப தாக, அந்தக் கடைகளில் பணிபுரியும் அப்பாவிகள் சொல்கிறார்கள்.

தமிழகம் முழுவதும்  ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இப்படிப்பட்ட "கோல்டு லோன்' வட்டிக் கடைக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ad

ad