புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2013


சென்னை காவல்துறையினர் இன்று (19.01.2013) ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.
இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை உயர் அதிகாரிகள்,


நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் மாதாவரம் மூலக்கடை ரோட்டில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிஎன் 02 எம் 9672 என்ற எண் கொண்ட கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. காவல்துறையினர் காரை நிறுத்த முற்பட்டபோது, கார் நிற்காமல் வேகமாக சீரிப்பாய்ந்தது.

சந்தேகம் அடைந்த போலீசார் பின்தொடர்ந்தனர். காரை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்துல் முனாப் (20) என்பவர் காரை ஓட்டி வந்ததும், ஒரு லட்சம் ரூபாய் கள்ள நோட்டு காருக்குள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் சொன்ன தகவ-ன் பேரில், முகமது ரபீக், வாசிம் ராஜா, முகமது இஸ்மாயில் ஆகிய மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முனாப் சொன்ன முகவரியில் பார்த்தபோது, போலீசாரை கண்டதும் இந்தக் கூட்டத்தின் தலைவன் முகமது ரபீக் தப்பியோடிவிட்டான். மீதம் உள்ள மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய முகமது ரபீக்கை பிடிக்க தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
படங்கள்: அசோக்

ad

ad