புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

.

ஏனைய மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரமே வடக்கிற்கும் வழங்க வேண்டும்: விமல்- மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர்களின் புதல்வர்கள் போட்டி
நாட்டில் ஏனைய மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்கள் மாத்திரமே வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் பயன்படுத்தப்படாத அதிகாரங்களை வடக்கு மாகாணத்திற்கு வழங்கினால், அது நாட்டின் பெரும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இருக்கும் சரியான நிலைப்பாட்டில் இருந்து, தவறான நிலைப்பாட்டுக்கு கொண்டு செல்ல, அரசாங்கத்தில் உள்ள சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனினும் ஜனாதிபதி மிகத்தெளிவாக நாட்டுக்காக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்து, பெறப்பட்ட வெற்றியை பின்நோக்கி செல்ல இடமளிக்காது, நாட்டை முன்னேக்கி கொண்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பவதற்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்துமாறு நாங்கள் கூறும் போது, தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதை நாம் எதிர்ப்பதாக கூறுகின்றனர்.
தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் இவர்களில் எவராக இருந்தாலும் இனத்தை காட்டி அதிகாரத்தை காட்ட முடியாத விதமான அதிகாரங்களை கொடுத்தால் அதனை எதிர்க்க போவதில்லை.
மேல் மகாணத்திற்கு கொடுக்கும் அதிகாரங்களை வடக்கு மாகாணத்திற்கும் கொடுங்கள். மேல் மாகாணத்தில் பயன்படுத்தப்படாத அதிகாரத்தை வடக்கு மாகாணத்திற்கு கொடுக்க வேண்டாம் என்றும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் அமைச்சர்களின் புதல்வர்கள் போட்டி?
இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் புதல்வர்கள் பலர் போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று அமைச்சர்கள், பிரதியமைச்சர் ஒருவரின் மகன் உட்பட 4 பேர் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மகன் நுவரெலியா மாவட்டத்திலும் பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்கவின் மகன் மாத்தளை மாவட்டத்திலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத்தவிர, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் மற்றும் அமைச்சர் ஜயரத்ன ஹேரத்தின் மகன் ஆகியோர் குருணாகல் மாவட்ட்த்தில் போட்டியிட உள்ளனர்.
அதேவேளை மத்திய மாகாண சபைத் தேர்தலில் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் மகன் அனுராத லங்கா ஜயரத்ன போட்டியிட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவித்தன.
உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பணியாற்றிவரும் அவர் தற்போது, பிரதமரின் தனிப்பட்ட செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.

ad

ad