புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,


 ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு - கென் கிருபாவா , மிட்சீ ஹன்டரா !ளியிடப்பட்டிருப்பினும் கூட ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியில் போட்டியிடும் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவக் கூடும் எனத் தெரிகிறது. ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதியில் போட்டியிடப் போகும் கென் கிருபா இகுருவி வாசகர்களுக்கு புதியவரல்ல. நம்மவர் என்பதால் அவரைப் பற்றி அதிகம் சொல்லித்தான்  தெரிய வேண்டும்  என்பதில்லை. அந்த பகுதியில் பிரபலமான ரியல் எஸ்டேட் முகவர் மட்டுமல்லாது கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர். 

 
அதே நேரத்தில் தற்போது லிபரல் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மிட்சீ ஹன்டரும் சாதாரண நபர் அல்ல. ரொறொன்ரோ சமுதாய வீட்டு வசதிக் கழகத்தின் முன்னாள் தலைவர் உட்பட பல முக்கிய பொறுப்புக்களை வகித்த பெண்மணி. இவர்களோடு என்.டி.பி தரப்பில் போட்டியிடப் போகும் நபர் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படாததால் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை தற்போது முடிவு செய்வது இயலாத ஒன்றாகிறது. 
 
மிட்சீ ஹன்டர் உயர் தகுதியுள்ள அதிகாரி என்ற போதிலும் கூட தற்போது லிபரல் கட்சிக்கு மக்க்ளிடத்தில் செல்வாக்கு சரிந்து வரும் சூழல் மற்றும் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் கென் கிருபா என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது கடுமையான போட்டியையே ஹன்டர் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. 
 
அதே நேரத்தில் லிபரல் கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர் செல்வாக்கு வாய்ந்த உயரதிகாரி என்பதும் தொடர்ந்து இருமுறை லிபரல் கட்சி வேட்பாளரான மார்க்ரெட் பெஸ்ட் இத்தொகுதியிலிருந்து ஒன்ரோறியோ சட்ட சபைக்குத் தெரிவானதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களில் ஒன்று.  
 
கென் கிருபாவும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்ற நிலையே தற்போது நிலவுகிறது. என்.டி.பி அறிவிக்கப் போகும் வேட்பாளரைப் பொருத்து நிலைமைகள் மாறவும் வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும் கடந்த இரு தேர்தல்களை வைத்துப் பார்க்கும் என்.டி.பி சார்பில் போட்டியிட்ட போது கூட அக்கட்சி மூன்றாமிடமே பெற்று வந்துள்ளதால் எப்போதும் இத்தொகுதியில் லிபரல் மற்றும் கோன்செர்வேற்றிவ் கட்சிகளுக்கிடையே தான் கடும் போட்டி நிலவி வந்துள்ளது.

ad

ad