புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூலை, 2013

,

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்புக்குழுவை நியமிக்க அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் இணக்கம்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் விசேட கூட்டம், கொழும்பில் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 5.15 மணியிலிருந்து இரவு 7.30 வரை நடைபெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஜனநாயக ரீதியாக ஒரு சக்திமிக்க ஸ்தாபனமாக பலப்படுத்துவதற்கான வாதப்பிரதிவாதங்களே கூட்டத்தில் அதிகளவில் இடம்பெற்றதோடு, வடமாகாணசபை தேர்தல் தொடர்பாக கருத்துப்பரிமாறல்களும் இடம்பெற்றுள்ளன.
கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் நீண்ட காலமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறாக இன்றைய கூட்டத்தில் ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 3 நபர்களை உள்ளடக்கிய 15 பேரைக்கொண்ட கூட்டமைப்புக்கான ஒருங்கிணைப்புக்குழுவை நியமிப்பதென ஒருமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்புக்குழுவுக்கு மேலதிகமாக நிதிக்குழுவையும், தேர்தல் குழுவையும் நியமிப்பதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை.சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும், தமிழர் விடுதலைகூட்டணியின் சார்பில் அதன் செயலாளர்நாயகம் ஆனந்தசங்கரியும், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சார்பில் அதன் செயலாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், புளொட் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், பவான், ராகவன் ஆகியோரும், ரெலோ அமைப்பின் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் கென்றி மகேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெனா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ad

ad