புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2013

இரணைமடுவில் இருந்து நீரைக்கொண்டு செல்வது பிரதேச முரண்பாட்டை தோற்றுவிக்கும்

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்வதால் பிரதேச முரண்பாட்டை உருவாக்க இது வழி சமைக்குமென கிளிநொச்சி மாவட்ட விவசாய சம்மேளனங்கள்
தெரிவித்துள்ளன.

அதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு போதியளவு நீர் கிடைக்காத நிலையில் எவ்வாறு இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்ல முடியுமெனவும் கேள்வியெழுப்பியுள்ளன.

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி நீரைக் கொண்டு செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்வி மான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான சந்;திப்பு கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன்போதே கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாம் யாரும் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுக்குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு எதிர்ப்புக் காட்டவில்லை.

எமது பிரதேசத்தில் இருபத்து இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சிறு போகத்தில் நீர்ப்பாசனத்தை நம்பியே விதைக்கப்படுகின்றது.
ஆனால் எட்டாயிரம் ஏக்கரில் இருந்து பத்தாயிரம் ஏக்கர் வரையான காணிகளுக்கு பயிர் செய்யும் காலத்தில் நீரை வழங்கக் கூடியதாகவுள்ளது.

இத்தகைய நிலையில் யாழ்ப்பாணத்திற்கு எந்த வகையில் இரணைமடுக்களத்தில் இருந்து நீரைக் கொண்டுசெல்ல முடியும்.
கிளிநொச்சி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவுசெய்த பின்னரே யாழ்ப்பாணத்திற்கு இரணை மடுக்குளத்தில் இருந்து நிரைக்கொண்டு செல்வதில் எந்த வகையான தடைகளும் இல்லையென கூட்டத்தில் கலந்துகொண்டவாகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ad

ad