புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2013

தி.மு.க.விலிருந்து அ.தி.மு.கவுக்கு மாறிய பார்த்திபன்

நான் திமுக அல்ல, திரைப்பட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவன். பின்னர் அதிலிருந்து அனைத்திந்திய திரைப்பட முன்னேற்றக் கழகத்திற்கு மாறியவன் என்று தனது ஸ்டைலில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பார்த்திபன்.
தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட திரைப்பட நூற்றாண்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜாவை அழைக்கவில்லை என்பதை தனது பாணியில் சுட்டிக் காட்டி அரசு செய்தது தவறு என்று நேற்று நடந்த பட விழா ஒன்றில் உணர்த்திப் பேசினார்
பார்த்திபன்.
இத்தனைக்கும் இதே பாரதிராஜாதான், தனது படம் ஒன்றில் பார்த்திபனை நடிக்க அழைத்து பின்னர் தடாலடியாக தூக்கி வீசியவர்.
இருப்பினும் பழையதை மனதில் கொள்ளாமல் பாரதிராஜாவை நேற்று ஆதரித்தும், உயர்த்தியும் பேசியுள்ளார் பார்த்திபன்.
படவிழாவில் கலந்து கொண்டு பார்த்திபன் பேசுகையில், பாரதிராஜா,சினிமா மீது பித்துப்பிடித்த கலைஞன். என்னைப்போன்ற நூறு இயக்குனர்களையும், பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார்.
மேலும் நான் தி.மு.க.வை சேர்ந்தவன் அல்ல. திரைப்பட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன். அதில் இருந்து அனைத்திந்திய திரைப்பட முன்னேற்ற கழகத்துக்கு மாறியவன் என்று தனது பாணியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, அம்மா உணவகம் தொடங்கியதும், நான் நேரடியாக சென்று அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, இது ஏழைகளின் இன்னொரு சத்துணவு திட்டம் என பாராட்டியவன் என்றும் இது தொடர்பாக முதல்வருக்கு பாராட்டு கடிதமும் எழுதி அனுப்பினேன் எனவும் கூறியுள்ளார்.

ad

ad