புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2013

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்காவின் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பிரான்சிலிருந்து சிறிலங்காவிற்கு சென்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.
விபத்தொன்றில் படுகாயமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் வீதியில் கிடந்த இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பயனின்றி
மரணமடைந்திருக்கின்றார். இச் சம்வத்தில் முல்லைத்தீவு வற்றாப்பளையைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் பிரஜாவுரிமை பெற்றவருமான மு.நிர்மலன் (வயது-50) என்பவரே மரணமடைந்தவராவார்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட உதயராசா என்பவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு சிறிலங்காவிற்கு வருகை தந்த நிர்மலன் பிரசார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனால், வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட உதயராசா வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளை மேற்படி நிர்மலன் என்பவர் நெடுங்கேணியில் வீதியில் காயங்களுடன் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தொன்றிலேயே இவர் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டாலும் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
விபத்தென்று கூறப்பட்டாலும், புலம்பெயர் தேசத்தில் வந்திருந்ததால் இவர் புலானய்வு வேலைக்காகவே வந்திருக்கிறார் என்று சந்தேகித்த சிறீலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையே இந்த கொலையை செய்ததாக ஊர்வாசிகள் சந்தேகப்படுகிறார்கள்.

ad

ad