புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2013

பூநகரி மக்கள் நீருக்கு அலையும் போது இரணைமடுக்குளத்தின் நீரை எவ்வாறு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது?

பூநகரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடி நீருக்கு அலைந்து திரியும் நிலை காணப்படுவதால் இரணைமடுக்குளத்தின் நீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய
வேண்டுமென பூநகரி பிரதேச சபைத் தலைவரும் அப் பகுதி விவசாய அமைப்புக்களும் வேண்கோள் விடுத்துள்ளனர்.

இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி நீரைக் கொண்டு செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான சந்திப்பு கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன்போதே கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பூநகரிப் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற போதிலும் இந்தப் பகுதியில் மக்கள் குடி நீர் இல்லாது அலைந்து திரியும் நிலையில் எமது பிரதேசத்தின் தேவையை நிறைவு செய்யாது எவ்வாறு வேறு இடங்களுக்கு நீரைக் கொண்டு செல்ல முடியும்.

நாம் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்வதை எதிர்க்கவில்லை. எமது பிரதேசத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அத்தியாவசியமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad