புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2013

 விக்கியை முதல்வராக ஏற்றாராம் ஆளுநர் 
வடக்கு மாகாண முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரனை ஏற்றுக்கொண்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் உத்தியோக பூர்வமாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவைசேனாதிராசா தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 28 உறுப்பினர்களும் ஒன்றுகூடி, க.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக ஏகமனதாகத் தெரிவு செய்தனர்.
 
இந்த அறிவிப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
 
இதற்கு ஆளுநர் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரனை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் இரு போனஸ் ஆசனங்கள் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் எப்போது சத்தியப் பிரமாணம் செய்வது என்பது தொடர்பிலும் நாளை சனிக்கிழமை தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் முடிவெடுக்கப்படும் என்றார். 

ad

ad