புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2013

மாகாண சபைகள் அதிகார வரம்புக்குள் செயற்பட வேண்டும்: கெஹெலிய
தமிழர்களின் மேலாதிக்கம் உள்ள வடக்கு மாகாண சபை உட்பட இலங்கையின் ஏனைய மாகாண சபைகள் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அதன் விருப்பங்களுக்கு அமைய அவற்றை கையாள முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை உட்பட இலங்கையின் சகல மாகாண சபைகளும் அவற்றிற்கு இருக்கும் அதிகார வரம்பிற்குள்ளேயே செயற்பட வேண்டும்.
காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே இருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் வடக்கு மாகாணத்திற்கு காணி கட்டுப்பாட்டு அதிகாரங்களை கூட்டமைப்பு கோருவது வலுவற்றது.
மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் இருப்பதாக ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை இரத்துச் செய்தது.
இந்த விடயம் தற்பொழுது மிகவும் தெளிவாகியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி அரசாங்கம் காணி அதிகாரங்களை பகிராது என்றார்.
அதேவேளை வடக்கு மாகாண சபையின் எதிர்கால பணிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
போர் நடைபெற்ற வடக்கு மாகாணத்திற்கு கடந்த 25 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட தேர்தலில் 36 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களை கைப்பற்றியது.
1987 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டமைப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது.
1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு அமைய மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கு தடைகளற்ற அதிகாரங்களை வழங்குவது சிறுபான்மை தமிழர்களின் கனவான நாட்டை பிரிப்பதற்கு அது வழிவகுக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கூட்டணியில் உள்ள சிங்கள தேசியக் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

ad

ad