புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2014


ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக துண்டு துண்டாவெட்டப்பட்டநிலையில் கொள்கலனில் வந்த  ஒன்பது வாகனங்களை நேற்று சுங்கத் திணைக்களத்தின் மத்திய உளவுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் கொழும்பு பாலத்துறையிலமைந் துள்ள கொள்கலன் இறங்கு துறையில் 40 அடி நீளமான கொள் கலன் சந்தேக நபர் முன்னிலையில் திறக்கப்பட்ட போது துண்டு துண்டாக வெட்டப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றின் பெறுமதி சுமார் 15 மில்லியன் ரூபா என மதிப்பிடப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகர் திலக் பெரேரா தெரிவித்தார்.
மிட்சுபிசி, டொயாட்டா, ஹொண்டா, மற்றும் மினி கூப்பர் ரக ஒன்பது வாகனங்கள் ஒவ்வொன்றும் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு மிக நேர்த்தியாக கொள்கலனுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கொள்கலனை ஸ்கேன் செய்தாலும் இவை கண்டுபிடிக்க முடியாதவாறு பழைய பாவிக்கக்கூடிய டயர்களால் மூடப்பட்ட நிலையிலேயே கொள்கலன் திறக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலனை விடுவிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து சுங்கத் திணைக்களத்தின் (சீ.ஐ.டி.) மத்திய உளவு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது. மத்திய உளவுப்பிரிவின் விசாரணைகைளின் போது கொள்கலனுள் ஜப்பானிலிருந்து தையல் இயந்திரங்கள் இறக்குமதி செய்வதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட போதும் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபர் கைதாகியுள்ளார். நேற்று சந்தேக நபர் முன்னிலையில் கொள்கலன் திறக்கப்பட்ட போது மேற் குறிப்பிடப்பட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தையல் இயந்திரம் இறக்குமதி என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய 40 அடி கொள்கலனினுள் ஒரே ஒரு தையல் மெஷின் மட்டுமே இருந்தது.
சுங்கத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
2 வருடத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 வருடத்துக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த வாகனங்களே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ad

ad