புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2014

பூஸா தமிழ்க் கைதிகளையும்; போர்க் குற்ற நிபுணர் பார்வை
பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அர சியல் கைதிகள் மற்றும் தமி ழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை, இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்கப் போர்க்
குற்ற நிபுணர் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை நேர டியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந் துள்ள அமெரிக்காவின் போர்க் குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப்
பூஸா தமிழ்க் பல்வேறு தரப்பினரையும் சந் தித்துக் கலந்துரையாடி வருகின்றார்.
இலங்கை அரச அதிகாரிகளை நேற்றுமுன்தினம் கொழும்பில் ஸ்ரீபன் ராப் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் பதிலளிக்கத் திணறியதாகத் தெரியவருகின்றது.
இலங்கை அரசினால் அமைக் கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடை முறைப்படுத்தப்படுகிறது என்று அரசின் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால் அது எந்த அளவில் நடந்து கொண்டிருக் கின்றது. அது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என ஸ்ரீபன் ராப் அதிகாரிகளிடம் கேள்வியயழுப்பிய போது அவர்கள் யாரும் சரியான பதி லளிக்கவில்லை என்று தெரி விக்கப்படுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம்
சட்டமா அதிபர் திணைக்களத் துக்குச் சென்ற ஸ்ரீபன் ராப் அங்கு சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோவைச் சந்தித்து சுமார் ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் திருகோணமலை யில் ஐந்து மாணவர்கள் சுட் டுக் கொல்லப்பட்டமை தொடர் பான வழக்கு மற்றும் திருகோ ணமலை அக்­ன் பார்ம் நிறு வன ஊழியர்கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர் பான வழக்கு ஆகியவை தொடர்பில் அவர் கலந்துரை யாடியுள்ளார்.
மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர் கள் தொடர்பிலும் அவர் ஆராய்ந்துள்ளார். இதன் போது அவர்கள் மீதான வழக் குகள் தொடர்பில் எடுக்கப்பட் டுவரும் நடவடிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத் தினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக பூஸா தடுப்பு முகா முக்குச் சென்று தடுத்து வைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களையும் அவர் சந்தித்துள்ளார்.  

ad

ad