புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2014

தினமும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார்! சனிக்கிழமை நான் கேட்பேன்! கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் தினந்தோறும் மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என அம்மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும், சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் குறைகளை தான் கேட்டறிவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


ஊழல் குறித்த புகார்களை மக்கள் தெரிவிக்க 4 இலக்க தொலைபேசி எண் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் புகார்கள் குறித்த நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படும். டெல்லி அரசின் நடவடிக்கை திருப்தியா என்பது குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் கேட்டறியப்படும். 
ஊழல் தொடர்பாக இதுவரை 4 ஆயிரம் தொலைபேசி புகார்கள் வந்துள்ளன. 53 புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

ad

ad