புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2014

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது

கடந்த இரண்டு வாரங்களாக கடும்பனியால் சிக்கி தவிக்கும் அமெரிக்கா மற்றும் கனடாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் பனியால் உறைந்துவிட்டதாக அதிர்ச்சி புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.

கனடா மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும், -20C பனி பொழிவதால் நயாகாரா நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் முழுவதும் உறைந்து எல்லாம் ஐஸ்கட்டியாக மாறிவிட்டது. சுற்றுலா பயணிகள் வருகை சுத்தமாக நின்றுவிட்டது.

இந்த பயங்கர பனியால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 240 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 1911ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு கடுமையான பனிப்புயல் தோன்றி நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது. அத்ன் பின்னர் சுமார் 100 வருடங்கள் கழித்து தற்போது தான் இவ்வளவு மோசமான பனி பொழிகிறது.

 


 
Niagara Falls FROZE in polar vortex
 

ad

ad