சனி, மார்ச் 15, 2014


பாஜக, அத்வானி பற்றி ஏன் பேசவில்லை? ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்கும் ஜெயலலிதா, பாஜகவைப் பற்றி குறிப்பாக அத்வானி பற்றி ஏன் பேசவில்லை என திமுக பொருளாளள்
மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், 
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம் திமுக. மத்திய அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது நெல்லையில் சென்னை வரை தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது. ஜெயலலிதா சாலையில் செல்லாமல் ஆகாயத்தில் பறப்பதால், இந்த திட்டம் அவரது கண்களுக்கு தெரியவில்லை. 
ஜெயலலிதா தவறாக பிரச்சாரம் செய்கிறார். சேது சமுத்திர திட்டம் தென் பகுதிமக்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமைசேர்க்கும் திட்டம். ஜெயலலிதாவின் சதி காரணமாக இந்த திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறப்பட்டிருக்கிறது. 
ஒவ்வொரு கூட்டத்திலும் திமுக, காங்கிரஸ், கலைஞர், மன்மோகன் சிங் ஆகியோரை அரசியல் நாகரீகமற்ற முறையில் விமர்சிக்கும் ஜெயலலிதா, பாஜகவைப் பற்றியோ, அத்வானியைப் பற்றியோ ஏன் விமர்சிக்கவில்லை. பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இரகசிய கூட்டு இருப்பதே இதற்கு காரணம் என்றார்.