நேற்று காலை 11மணியளவில் இடம்பெற்ற உலக உணவு திட்டம் தொடர்பிலான ஆய்வொன்று யாழ். கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இரணைமடுத்திட்டம் தொடர்பில் உங்கள் கருத்துக்கள் பற்றி அமைச்சரிடம் வினவிய போது அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் தெரிவிக்கையில்,
அரசாங்கம் இந்த இரணைமடுக்குளம் தொடர்பில் வேறு விதமான மாற்றுத்திட்டங்களை கொண்டுவரும் பட்சத்தில் நாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முனைவோம்.
ஆயினும் இரணைமடுக்குளத்திலிருந்து வெளியேறும் நீரை யாழிற்கு வழங்க நாம் ஒருபோதும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
இரணைமடுக்குளத் தண்ணீர் தான் ஆணையிறவு கடல் நீர் ஏரிக்கும் வருகிறது.இரணைமடுக்குளத்தில் நிறையும் தண்ணீர் ஆணையிறவு கடல்நீர் ஏரி ,சுண்டிக்குளத்திற்கும் போவதால் இறால்,மீன்கள் என பல உற்பத்தியாகின்றது.
மேற்படி வான்கதவு திறக்கும் போதும்,மழை பெய்து வெள்ளம் வரும் போதும் இரணைமடுக்குளம் நிரம்புகிறது.
இதனால் நிரம்பி வெளியேறும் நீரை நன்னீராக்கி யாழ் குடாநாட்டிற்கு வழங்க முடியும். ஆகவே இரணைமடுக் குளத்து நீரை மாற்று நீர் அமைப்புக்களினூடு அந்நீரை யாழிற்கு வழங்க தீர்மானித்துள்ளோமே ஒழிய இரணைமடுக் குளத்து தண்ணீரை யாழிற்கு வழங்க மாட்டோம் என்று நாம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.