புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

15 மார்., 2014


ஜெயலலிதா பா.ஜ.க.வோடு சேரும் முயற்சியில் உள்ளார்: தா.பாண்டியன்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,


அ.தி.மு.க.வுடான கூட்டணி நன்றாக தான் இருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர் தான் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 2 மாதங்களாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் போது மத்தியில் அமைகிற ஆட்சியில் பங்கேற்போம் என ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் அவர் பா.ஜ.க.வோடு சேரும் முயற்சியில் உள்ளார்.
எந்த கூட்டத்திலாவது பா.ஜ.க.வை தாக்கி ஜெயலலிதா பேசியுள்ளாரா?. எந்த கொள்கையை எடுத்தாரோ? அந்த முடிவில் இருந்து அவர் தடம்புரண்டு இருக்கிறார். அரசியல் நிலைப்பாட்டில் இருந்து அவர் மாறியிருக்கிறார். இதில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதனால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். தொகுதி பிரச்சினைக்காக நாங்கள் வெளியேறவில்லை. பாஜக ஜனநாயத்தை தலைகீழாக மாற்றப் பார்க்கிறது. மக்களை நம்பித்தான் இந்திய கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுகிறது என்றார்.