புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2014


பாரிசில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் இலவசம்

பரீஸ் மற்றும் அதன் புறநகரங்களில் வளி மண்டலம் மிகவும் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த நகரம் மாசுபடுதலின் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஃப்ரான்சில்
ஏற்பட்டுள்ள திடீர் குளிரினால் பரீஸ் முழுவதும் காற்று இல்லாமல் போனது.
மேலும், வாகனங்கள் வெளியேற்றும் நச்சு புகையும், குளிரைப் போக்கிக் கொள்ள மக்கள் வீடுகளில் பயன்படுத்தும் ரேடியேட்டர் கருவிகளும் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது. இதையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாகனங்களின் புகையை தவிர்க்கவும் அங்கு மூன்று நாளைக்கு பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
பரீஸ் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் இந்த பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று நகர போக்குவரத்து அமைப்புத் தலைவர் ஜீன் பால் ஹூச்சோன் கேட்டுக் கொண்டுள்ளார். லாரிகள் போன்ற வர்த்தக வாகனங்களை நிறுத்தி வைக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad