இந்த செய்தியை எமது இணையம் சுமார் 36 மணித்தியாலங்களுக்கு முதலே வெளியிட்டிருநதது வாசகர்கள் அறிந்ததே .எந்த இணையைததிலும் வராத செய்தியாக அது அப்போது இருந்தமை பெருமைக்குரியது .
239 பயணிகளுடன் சென்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்: மலேசிய நஜிப் ரஸாக் பேட்டி
வி
மானம் காணாமல் போனது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
காணாமல் போன மலேசிய எம்.எச்370 விமான தகவல் தொடர்புகள் செயலிழந்துள்ளன. உள்ளூர் நேரப்படி கடந்த மார்ச் 8ஆம் தேதி காலை 8.11க்கு தகவல் தொடர்பை விமானம் இழந்தது. தகவல் தொடர்பு சாதனங்கள் செய-ழக்க வைக்கப்பட்டு கடத்தியிருக்கலாம்.
காணாமல் போன வினமாத்தை தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானத்தை தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணியை மேற்கொண்டோம். பலன் இல்லாததால் தேடும் பணியை அந்தமான் கடல் பகுதி வரைவிரிவுபடுத்தினோம். விமானத்தை தேடும் பணியில் 42 கப்பல்கள், 39 விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உதவி செய்யும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்,
239 பயணிகளுடன் கடந்த 8ம் தேதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸின் எம்.எச்-370 விமானம் வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென காணாமல் போனது. காணாமல் போன விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 இந்தியர்கள் இருந்தனர்.
சீனா மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடுதல் வேட்டை நடத்தியும் அந்த விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது இந்தியாவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் காணாமல் போன மலேசிய விமானம் எம்.எச்-370 கடத்தப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வருவதாகவும், தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழக்க வைத்துவிட்டு, விமானத்தை அனுபவமிக்க ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோர் கடத்தியிருக்கலாம் என்று அந்நாட்டு விசாரணை அதிகாரிகள்
தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தநிலையில் மலேசிய பிரதமரும் இதே சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.