புதன், ஏப்ரல் 02, 2014

சன்மானம் 10 இலட்சம்-பொலிஸாரினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என மூவரது புகைப்படங்கள் 
தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளது.


அதற்கமைய இவர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களை தெரிவிக்க தொலைபேசி இலக்கம், நகல் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் இவர்கள் மூவரும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=531342819402210293#sthash.kyzf46aa.dpuf