புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2014

புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளைத் தடைசெய்யும் அறிவிப்பில் கையெழுத்திட்டார் பீரிஸ்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 இலக்க தீர்மானத்துக்கு அமைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும், 15 புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுவது தொடர்பான, ஆவணத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பயங்கரவாதத்துக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 இலக்க தீர்மானத்துக்கு அமைய, பட்டியலிடப்பட்டுள்ள ஆட்கள் மற்றும் அமைப்புகள் பற்றிய பிரகடனத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும்.

சிறிலங்கா பாதுகாப்பு செயலரின் பரிந்துரையின் பேரிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டவிதிமுறைகளின் கீழ், பட்டியலிடப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகளின் சொத்துகள், நிதிகள், பொருளாதார வளங்கள் அனைத்தும், இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வரையில் முடக்கி வைக்கப்படும்.

உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி முடக்கப்பட்ட சொத்துகளை இடம்மாற்றுதல், கைமாற்றுதல், மற்றும் அதனைக் கையாள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறுவோர் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பல்வேறு நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, இத்தாலி, நோர்வே, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

ad

ad