புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஏப்., 2014

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரம் தமிழருமான சண்முகம் யாழ் நூலகத்துக்கு பேரூந்து அன்பளிப்பு வைப்வ்த்தில் கலந்து கொள்கிறார்

சிங்கப்பூர் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2முதல் 5ம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர், யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
நாளை மறுநாள் அவர் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளார். அத்துடன் லகஸ்மன் கதிர்காமர் நிறுவகத்துக்கும் சிங்கப்பூரின் தெற்காசிய கற்றை நெறி நிறுவகத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் போது சண்முகம் சாட்சியாக பங்கேற்பார்.
ஏப்ரல் 4 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு செல்லும் சண்முகம், அங்கு ஆங்கில தொடர்பாடல் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன் சிங்கப்பூர் பொதுநூலகத்தில் இருந்து யாழ்ப்பாண நூலகத்துக்கு அன்பளிக்கப்பட்ட நடமாடும் நூலக பஸ் ஒன்றை அன்பளிக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

ad

ad