புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014

போகோஹராம் தீவிரவாதிகள் கொலை வெறித் தாக்குதல் 150 பேர் படுகொலை
நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய கொலை வெறித் தாக்குதலில் சுமார் 150 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நைஜீரியா நாட்டின் வட கிழக்கு பகுதிகளில் அமைந்த டமாடுரு நகரில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு பொலிஸ் செய்தி தொடர்பாளர் இம் மானுவேல் ஒஜக்வூ கூறும் போது, கடந்த திங்கட்கிழமை போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலை அடுத்து நகரில் உள்ள சிறப்பு வைத்தியசாலையில் 115 உடல்கள் கொண்டு வரப் பட்டுள்ளன.

38 பொலிஸார்


அவர்கள் பொதுமக்களா? அல்லது ஊடுருவல்காரர்களா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
115 பேரும் சாதாரண குடிமக்கள் போன்று உடை அணிந்து இருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி பலியானவர்களில் இரு மருத்துவர்கள், யோப் நகர மத் திய பாலிடெக்னிக் ஊழியர் மற்றும் அவரது இரு குழந்தைகளும் அடங்குவர். 6 இராணுவ வீரர்கள் மற்றும் 38 பொலிஸாரும் தாக்கு தலில் பலியாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மீட்பு படையி னர் உடல்களை தேடும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் இருந்து மக்கள் தப்பி செல்லும்போது ஏற்பட்ட காய த்தால் பலர் பலியாகி இருக்கக் கூடும் என்றும் தகவல் தெரிவிக் கின்றது.

இந்த தாக்கு தலில் 78 பேர் காயம் அடைந்து உள்ளதா கவும் அவர்களில் 53 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும் மீட்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.        

ad

ad