புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளில் விலைகளில் குறைப்பு செய்யப்படுகிறது.
இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் சகல பெற்றோல் வகைகள் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 7ரூபாவால் குறைக்கப்படுகின்றன.
மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக்கொண்டே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்தில் ஐக்கிய தேசியக்கட்சி இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதும் அரசாங்கம் இலங்கையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்கவில்லை என்று அந்தக்கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.
அத்துடன் தேர்தலை இலக்காக வைத்து அரசாங்கம் விலைக்குறைப்புக்களை மேற்கொள்ளலாம் என்ற எதிர்வையும் அந்தக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad