புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது? மக்கள் கருத்து கணிப்பின் பின்பே த.தே.கூட்டமைப்பு முடிவை அறிவிக்கும்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பின் பின்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை அறிவிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மருதனார்மடத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர் களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரினை ஆதரிப்பது என்று இதுவரை (நேற்று) தீர்மானிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினை தற்போது அறிவித்தால் அது பாரதூரமாக அமைந்துவிடும் என்பதனால் பொறுமையாகவுள்ளோம்.

இது தொடர்பில் எமது கட்சி ஒன்றுகூடி இறுதித்தீர்மானம் எடுக்கும். அவசியமென்றால் அதனை வெளியிடுவோம்.

இதனைவிட பல இடங்களிற்கு சென்று மக்களினை, புத்திஜீவிகளினை சந்தித்து அவ ர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே நாம் எமது முடிவினை அறிவிப்போம்.

அதுவரை மக்கள் உட்பட அனைவரும் அவசரப்படாமல் பொறுமைகாக்குமாறு அவர் தெரிவித்தார்.

மேலும் நாம் எமது காணிகளிற்கு போக வேண்டும்மென்பதில் மக்கள் உறுதியாக விருக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் எமது நிலங்கள் விடுவிக்கப்படாவிட்டால் நாம் போராடுவோம்.

யாழ்.மாவட்டத்தில் இராணுவமும் ஏனைய மாவட்டங்களில் இராணுவத்தின் உறவினர்களும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றியிருந்தார்

ad

ad