புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014



நட்சத்திர வீரர் சங்கா இரட்டைச் சாதனை
இங்கிலாந்து அணி க்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சங்கக்கார இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் முத லில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி  242  ஓட்டங்கள் எடுத்தது.

இதில் சங்கக்கார 63 ஓட்டங்கள் எடுத்தார்.முன்னதாக இவர் 13 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

37 வயதான சங்கக்கார இதுவரை 386 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 சதத்துடன் 13 ஆயிரத்து 50 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இந்த வகையில் முதல் 3 இடங்களில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (18ஆயிரத்து426 ஓட்டங்கள்), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (13ஆயிரத்து704), இலங்கையின் ஜெயசூரியா (13ஆயிரத்து430) உள்ளனர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 21 ஓவர் முடிந்திருந்த போது 2 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதில் குக்கை (34 ஓட்டங்கள்) விக்கெட் கீப்பர் சங்கக்கார கட்ச் செய்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிகம் பேரை ஆட்டம் இழக்க செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை படைத்தார்.

இவர் இதுவரை 473 பேரை (386 ஆட்டம்) வெளியேற்றி இருக்கிறார். அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 472 பேரை (287 ஆட்டம்) ஆட்டமிழக்கச் செய்ததே இதற்கு முன்பு விக்கெட் கீப்பரின் சாதனையாக இருந்தது.       

ad

ad