புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2014

காஷ்மீரில் 4 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: 11 பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 23 பேர் பலி


காஷ்மீரில் ஒரே நாளில் 4 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். 

பாராமுல்லா மாவட்டத்தில், சர்வதேச எல்லையையொட்டிய முகாரா என்ற பகுதியில் உள்ள ராணுவ முகாமில் வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதில் மூத்த ராணுவ அதிகாரி உள்ளிட்ட 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள், பொதுமக்கள் என 23 பேர் பலியாகி உள்ளனர்.

முகாரா பகுதியில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் புறநகர் பகுதியான, சவுரா என்ற பகுதியில், தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த ராணுவத்தினர், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அங்கு ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். தெற்கு காஷ்மீரில் சோபியான் பகுதியில், காவல்நிலையம் ஒன்றின் மீதும், ரோந்து வாகனம் ஒன்றின் மீதும் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. புலவாமாவில் பேருந்து நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இங்கு நின்றுகொண்டிருந்த 7 பயணிகள் படுகாயம் அடைந்தனர். ஒரே நாளில் 4 இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதையடுத்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி காஷ்மீரில் 3ம் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பீதியை ஏற்படுத்த இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்த ராணுவத்தினர், எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படும் என்றனர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், விழிப்புடன் இருக்குமாறு ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வரும் ராணுவத்தினர், அவர்களை இடைமறித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவத்தினரின் கை ஓங்கியிருப்பதையே இன்றைய தாக்குதல் உணர்த்துகிறது என்றார். 

ad

ad