புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

தீவகத்தில் தனிநடைமுறை: மக்களை சுரண்டும் இ.போ.ச

யாழ்ப்பாண தீவகத்தில் இலங்கை போக்குவரத்துச்சபை செய்யும் இன்னொரு அநியாயம் அம்பலமாகியுள்ளது. எந்த சட்டதிட்டத்தையும்
பொருட்படுத்தாமல், அதிகளவிலான கட்டணத்தை பயணிகளிடம் இருந்து பெறும் தகவல்களை ஆதாரங்களுடன் அந்த பகுதி மக்கள் வெளியிட்டுள்ளனர்.
அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட தயாராகி வருகின்றனர். இ.போ.சவின் வடபிராந்திய போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேரூந்துகள் பாய்ச்சல் கட்டணம் என்ற பெயரில் இந்த சட்டத்திற்கு மீறிய கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.
அதிவேக வீதிகள், சொகுசுப் பேரூந்துகள் தவிர்ந்த மற்றைய தனியார், அரச பேரூந்துகளிற்கு நிர்ணய கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிர்ணயித்துள்ளது. ஆனால், தீவகத்தில் இவையெதுவும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை 777 இலக்க வழித்தடத்தில் 16 கட்டணத்துறை நிலையங்கள் காணப்படுகின்றன. ஆனால் 21 கட்டணத்துறைகளிற்குரிய பணம் பயணிகளிடம் அறவிடப்படுகிறது. 16வது கட்டணத்துறையான கண்ணகையம்மன் துறைக்கு செல்லும் பயணிகள் செலுத்த வேண்டியது 49 ரூபா. ஆனால் தற்போது அவர்களிடம் 64 ரூபா அறவிடப்படுகிறது.
13வது கட்டணத்துறையான ஊர்காவற்றுறைக்கு செல்லும் பயணி நிர்ணயகட்டணமான 46 ரூபாவுக்கு பதிலாக 56 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.
இதேபோன்ற நிலைதான் யாழ்ப்பாணம்- குறிகட்டுவான் 776 வழித்தடத்திலும் காணப்படுகிறது. 20 கட்டணத்துறைகளை கொண்ட அந்த வழித்தடத்தில் செலுத்த வேண்டியது 57 ரூபா. ஆனால் அறவிடப்படுவது 78 ரூபா.
இதுகுறித்து வடபிராந்திய போக்குவரத்துசபையின் உதவிச்சாலை முகாமையாளர் எஸ்.கஜேந்திரனை தொடர்பு கொண்டு கேட்டபோது- இந்த பாய்ச்சல் கட்டண நடைமுறை இலங்கையில் தீவகத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இது முன்னைய அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்றுவரை மாற்றப்படாமல் தொடர்கிறது. விரைவில் இதனை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.நன்றி குணாளன் 

ad

ad