புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

4வது நாளாக தொடரும் சரிபெருமாளின் சசிபெருமாளுடன் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி தேசிய மக்கள் கூட்டமைப்பு தலைவர் சசிபெருமாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

கொட்டிவாக்கம் குப்பம் பீச்ரோடு காவேரி தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 30–ந்தேதி தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார்.  அவருடன் பெண்கள் தேசிய பாதுகாப்பு இயக்க தலைவர் கலைச்செல்வி, விசிறி சாமி, முருகன், திரவியம், குப்பம் சிவாஜி, லிங்கேஸ்வரன் உள்பட 13 பேர் பங்கேற்றனர். இன்று 4–வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது.

இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த கலைச்செல்வி நேற்று இரவு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இருந்தபோதிலும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. உண்ணாவிரதம் இருக்கும் இடம் அருகே போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

சசிபெருமாள் முதலில் சேப்பாக்கம் திருவள்ளூர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. பின்னர் நீலாங்கரையில் போராட்டத்துக்கு அனுமதி கேட்டார். அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதனால் அவர் கொட்டிவாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தனியார் இடத்தில் உண்ணாவிரதம் இருப்பதால் சசிபெருமாள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் போலீசார் இருப்பதாக கூறப்படுகிறது.

ad

ad