புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

பாய்ந்து சென்ற அரசு பேருந்து…எதிரே வந்த ரயில்: உயிர்தப்பிய 70 பயணிகள்

சென்னையில் ரயில்வே மதில்சுவரை இடித்துக்கொண்டு தண்டவாளத்துக்குள் பாய்ந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து, நேற்று இரவு தாம்பரம் இரும்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இரும்புலியூர் சிக்னலில் இரு சக்கர வாகனத்தில் ஒரு பெண் சாலையை திடீரென கடக்க முயன்றார்.
உடனே பேருந்து ஓட்டுநர் நாகூர்கனி அந்த பெண் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியபோது, பேருந்து இடது புறம் இருந்த ரயில்வே மதில் சுவரை இடித்து கொண்டு ரயில்வே தண்டவாளம் பகுதியில் புகுந்தது.
இதனால் பயணிகள் ‘அய்யோ அம்மா’ என அலறினர், அப்போது இரும்புலியூர் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த பொலிஸ்காரர் அருண்பிரசாத் தண்டவாளம் பகுதிக்கு விரைந்து சென்றார்.
அந்த நேரம் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது.
இதை பார்த்த அருண்பிரசாத் இருட்டில் ஒளிரும் சிகப்பு கோட்டை கழற்றி ரெயிலை நோக்கி காட்டினார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை மெதுவாக இயக்கினார்.
அதற்குள் பேருந்து ஓட்டுநர் நாகூர்கனி பேருந்தை பின்னோக்கி எடுத்து தண்டவாளம் பகுதியில் இருந்து வெளியில் கொண்டு வந்தார்.
பேருந்து வெளியில் செல்வதும் மின்சார ரயில் அந்த பகுதியை கடப்பதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து பொலிஸ்காரரின் துணிச்சலான நடவடிக்கையால் உயிர் பிழைத்தோம் என்று கூறிய பயணிகள் அவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

ad

ad