புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2015

பொன்சேகாவை எம்.பியாக நியமிக்க கோரி போராட்டத்தில் குதிக்கும் ஜனநாயகக் கட்சி

ராஜபக்ச ஆட்சியில் பலவந்தமாக பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட கலாநிதி ஷராணி பண்டாரநாயக்கவை
மீண்டும் அந்த பதவியில் நியமித்தது போல் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கம் சரத் பொன்சேகாவின் குடியுரிமையை பறிந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தது.
அவரை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் பாரிய மக்கள் நிலைப்பாட்டை கட்டியெழுப்ப ஜனநாயகக் கட்சி தீர்மானித்தள்ளது.
இதன் முதற்கட்டமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய உட்பட சட்டத்தரணிகள் இன்று முற்பகல் 9.30 அளவில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து இது சம்பந்தமான சட்ட ரீதியான நிலைமைகளை தெளிவுப்படுத்தியதாக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கும் வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
சரத் பொன்சேகா மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்வதை தடுக்கும் செயற்பாடுகளில் அரசாங்கத்தில் உள்ள சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இது சம்பந்தமாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad