புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2015

கால்பந்து போட்டி சக வீரர் மீது எச்சில் துப்பிய வீரருக்கு 7 போட்டிகளில் விளையாட தடை



 இங்கிலீஷ் பிரிமீயர் லீக் எனப்படும் (EPL) என்ற கால்பந்துத் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமையன்று மான்செஸ்டர் யுனைட்டெட் அணியும், நியூகேஸில் யுனைட்டெட் அணியும் மோதின. அப்போது முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் இரு அணி வீரர்களிடையே மோதல் வெடித்தது. 

மான்செஸ்டர் வீரர் ஜானி இவான்ஸ் மற்றும் நியூகேஸில் வீரர் பாபிஸ் சிஸ்ஸே ஆகியோருக்கு இடையே மோதல் வெடித்தது. சிஸ்ஸே வைத்திருந்த பந்தை இவான்ஸ் பறிக்க முயன்றபோது இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை மூண்டது.அடுத்து யாரும் எதிர்பாராத வகையில் இருவரும் சரமாரியாக ஒருவர் முகத்தின் மீது இன்னொரு எச்சிலைத் துப்பி உமிழ்ந்தனர். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 நடுவர் உடனடியாக சிஸ்ஸேவுக்கு ரெட் கார்டு காட்டி வெளியேற்றினார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்ப்பட்டது. இதில் முதலில் சிஸ்ஸேதான் எச்சிலைத் துப்பினார் என்பது தெரிய வந்தது. பதிலுக்குத்தான் இவான்ஸ் பதிலுக்குத் துப்பியுள்ளார். இதையடுத்து சிஸ்ஸேவுக்கு தற்போது 7 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல இவான்ஸுக்கும் தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

ad

ad